Friday, December 27, 2024

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்

ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள இரும்புசத்து நிறைந்த புரதம் ஆகும்.

உடலில் உள்ள உறுப்புக்கள் இயங்குவதற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்ய ஆண்களுக்கு ஒரு டெசி லிட்டருக்கு 13இல் இருந்து 17 மற்றும் ஒரு பெண்ணுக்கு 12இல் இருந்து 15 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருப்பது அவசியம்.

ஹீமோகுளோபினை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான கீரை வகைகளில் இரும்பு சத்து மிகுதியாக உள்ளதால், பச்சை கீரைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இரும்பு சத்து, விட்டமின் C, விட்டமின் B Complex மற்றும் Folic acid உள்ள பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் சிகப்பு இரத்த அணுக்கள் உருவாகி ஹீமோகுளோபினின் அளவு உயர்வது சாத்தியமாகிறது.

மேலும் ஹீமோகுளோபினை அதிகமாக்கும் உலர்ந்த திராட்சை, கம்பு, எள்ளு, முட்டை, இறைச்சி, மீன், ராகி, பருப்பு வகைகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவை உள்ளடங்கிய சரிவிகித உணவு முறையை கடைபிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news