Thursday, August 28, 2025
HTML tutorial

தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

தயிரை உணவில் சேர்ப்பதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். தயிர் சாப்பிடுவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால், தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளன. அவை எவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தயிர் சாப்பிட்ட பிறகு நெய்யில் செய்யப்பட்ட இனிப்புகள், பக்கோடா, சீஸி ஃபிரைஸ் போன்ற எண்ணெய் உணவுகளை உண்டால், செரிமானம் தாமதமாகும். சிலநேரங்களில் செரிமானக் கோளாறும் உண்டாகலாம். அதுமட்டுமல்ல, உங்களை சோம்பேறியாக உணரச் செய்யும்.

ஒரே நேரத்தில் பலவிதப் புரதச் சத்து நிறைந்த உணவுகள் உண்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிகப் புரதம் உள்ளது. அதிகப் புரதம் அஜீரணம், தோல் நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

பால் மற்றும் தயிரை சேர்த்து உண்டால் நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும். தயிர் சாப்பிட்டபின் மாம்பழம் சாப்பிடுவது அல்லது இரண்டையும் சேர்த்து உண்பது உடலில் நச்சுகளை ஏற்படுத்தும். இப்படிச் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.

உடல் ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் நாம் உண்ணும் உணவுகள் நமக்கு நன்மைகளைத் தருவதற்குப் பதிலாகத் தீமைகளை ஏற்படுத்திவிடக்கூடாது. உடல் ஆரோக்கியம்தான் நமது பெருஞ்சொத்து.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News