மக்களே உஷார் ! இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

782
Advertisement

ராஜா போல காலை உணவும் , ஏழை போல இரவு உணவும் சாப்பிடவேண்டும்.இப்படி இருக்க இரவில் ஏழை போலவாவது உணவை சாப்பிட வேண்டும்,இரவு உணவை தவிர்ப்பதால் பல கேடுகள் ஏற்படுகின்றன.

இரவு உணவு அருந்தாமல் இருப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ,அதுபோல இரவு உணவை அளவோடு சாப்பிடுவதும் அவசியமான ஒன்றாகும்.

இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

உடல் இடையை குறைக்கவேண்டும் என்பதற்காக சிலர் இரவு உணவை தவிர்த்து விடுகிறார்கள் ,குறைந்த அளவிலாவது இரவில் உணவை உட்கொள்ளவேண்டும்,இல்லையென்றால் அது தூக்கமின்மை,மன ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்,இதுமட்டுமல்லாமல் சீலர் இரவு உணவிற்காக துரித உணவை உட்கொள்கிறார்கள் அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு மன கவலையையும் ஏற்படுத்துகிறது என்று செய்திகளில் குறிப்பிட பட்டிருக்கிறது.

இரவு உணவைத் தவிர்ப்பது கார்டிசால் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்,மன அழுத்த ஹார்மோன் என்றழைக்கப்படும் இது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடுகிறதாம்,இதுமட்டுமல்லாமல் தூக்கமின்மை,உயர் ரத்த அழுத்தம் போன்ற இன்னும் பல விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறதாம்.

ஆகையால் ஏழை போலாவது இரவில் உணவருந்துங்கள்.