Wednesday, September 3, 2025

வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் – பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தானில் பெய்த கனமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில், வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள் என்று அந்நாட்டு அமைச்சர் பேசி இருப்பத சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணத்​தில் கனமழை​யால் வரலாறு காணாத வெள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது.

கனமழை, வெள்​ளத்​துக்கு இது​வரை 33 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2 ஆயிரத்து 200 கிராமங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதனால் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பாது​காப்பு கருதி 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​துள்​னர்.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப், உள்​ளூர் தொலைக்​காட்சி ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில், “இந்​தத் தண்​ணீரை சேமித்து வைக்க வேண்​டும் என்றும், மக்​கள் சாலைகளில் அமர்ந்து போக்​கு​வரத்​துக்கு தடை ஏற்​படுத்துவதற்கு பதில் அவர்கள், தண்​ணீரை தங்​கள் வீட்​டுக்கு எடுத்​துச் சென்று கொள்​கலன்​களில் சேமிக்க வேண்​டும் எனவும் கூறினார்.

இந்​தத் தண்​ணீரை ஓர் ஆசீர்​வாத​மாக கருத வேண்​டும் என்றும், அணை​கள் கட்டி இவ்​வளவு தண்​ணீரைச் சேமிக்க பொது​வாக 8-10 ஆண்​டு​கள் ஆகும்” என்​றார். பாகிஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News