வடகிழக்கு பருவமழை தீவரமடைந்து வருவதால் தமிழகத்தின் பலவேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டதில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.