தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜுன் 14 வரை 61 நாட்கள் தமிழகத்தில் இந்த தடை அமலில் இருக்கும். மீன்பிடி தடைக்காலம் என்பதால் தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை பொருட்படுத்தாமல் மக்கள் அதனை வாங்கி செல்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் தற்போது ரூ. 800 விற்ற சீலா மீன் ரூ 900க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகரை கிலோ 300 ரூபாய்; நண்டு கிலோ 600 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.