Saturday, May 24, 2025

”எனக்கு யாருன்னு தெரியாது” கோலியிடம் ‘பல்பு’ வாங்கிய STR

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் King Kohli சமீபத்தில், தான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல், ‘பத்து தல’ படத்தின் ‘நீ சிங்கம் தான்’ என்று வெளிப்படையாக பேசியிருந்தார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் செம வைரலானது. சிம்பு ரசிகர்களும் கோலியை கொண்டாடித் தீர்த்தனர்.

இந்தநிலையில் ‘பத்து தல’ படத்தின் ஹீரோ சிம்பு, விராட் கோலியுடனான சந்திப்பு குறித்து அண்மையில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், ” ஆரம்ப காலத்தில் கோலி 2 வருடங்கள் தான், கிரிக்கெட்டில் தாக்கு பிடிப்பார் என்று அனைவரும் சொன்னார்கள்.

ஆனால் நான் விராட் தான் அடுத்த சச்சின் என கணித்தேன். நினைத்தது போல அவரும் நல்ல உயரத்தை சில வருடங்களில் எட்டினார். அப்போது கோலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நம்ம சொன்ன பையன் இன்னைக்கு பெரிய ஆளாகியிருக்கான்.

போய் பேசுவோம் என்று நேரில் சென்று Hi சொன்னேன். பதிலுக்கு அவர் ‘நீங்க யாருன்னு? கேட்டார். நான் சிம்பு என்று கூறியதும், அவர் “எனக்கு உங்களை தெரியாது’ என்று கூறிவிட்டார். அப்போது ஒருநாள் நாம் யார் என்று அவருக்குத் தெரியவரும், என்று நினைத்துக் கொண்டேன்.

அதேபோல என்னுடைய ‘ நீ சிங்கம் தான்’ பாடலே, அவரின் பேவரைட் என தற்போது தெரிவித்து இருக்கிறார். இப்பொழுதும் என்னை யாரென்று அவருக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. அவர் பிடிக்கும் என்று சொன்னது அந்த பாடலைத்தான். ஆனால் அந்த சந்திப்பை மறக்கவே முடியாது,” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”உங்க இடத்துல வேறு யாரும் இருந்திருந்தா, இதைப்பத்தி பேசியிருக்கவே மாட்டாங்க. ஆனா நீங்க ஓபனா சொல்றீங்க. உங்ககிட்ட பிடிச்சதே இந்த வெளிப்படையான பேச்சு தான்,’ என்று சிம்புவைப் பாராட்டி வருகின்றனர்.

விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க, STR தான் சரியான ஆள் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் பல வருடங்களாக கூறி வருகின்றனர். இதற்கிடையே சிம்புவை யாரென தெரியாது என்று, கோலி சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news