Saturday, December 21, 2024

ஹைட்ரஜன் பேட்டரி பேருந்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

சிலியில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் பேட்டரி பேருந்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் பேட்டரி பேருந்தை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பெட்ரோல், டீசல் மூலம் ஏற்படும் காற்று மாசை குறைப்பதற்காக இவ்வகை பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். ஹைட்ரஜன் பேருந்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் செல்லலாம். இந்த நிலையில், ஹைட்ரஜன் பேட்டரி பேருந்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

Latest news