மதுரை ரயில் நிலையம் செல்லக்கூடிய மேலமாரட் வீதி பகுதியில் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், சிறிதுநேரத்தில் மளமளவென பரவ தொடங்கியது.
அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த சிலர், அலுவலகத்திற்குள் சென்று அங்கு புகையில் சிக்கி தவித்த அலுவலக நிர்வாக அதிகாரியான ராமு என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர், அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் மேலாளரான கல்யாணி நம்பி, தீயில் கருகி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து திலகர்திடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
