தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும்.
தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.