நீங்கள் முதல் முறையாக கடன் வாங்க நினைத்தால், உங்கள் CIBIL மதிப்பெண் குறைவாக இருக்கிறதா இல்லையா என்று கவலைப்படுகிறீர்கள் என்றால், இப்போதே கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஏனென்றால் CIBIL மதிப்பெண் குறைவாக இருந்தாலும் நீங்கள் கடன் வாங்க முடியும். இந்தச் செய்தி முதல் முறையாகக் கடன் வாங்க விரும்பும் லட்சக்கணக்கான மக்களுக்கு நிம்மதியைத் தரும்.
ஒவ்வொரு வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனமும் (NBFC) பணத்தை எளிதாக திருப்பிச் செலுத்தக்கூடிய வாடிக்கையாளருக்கு கடன் வழங்க முயற்சிக்கின்றன. CIBIL மதிப்பெண் இதில் பெரிதும் உதவுகிறது, ஏனெனில் இது வாடிக்கையாளரின் முழுமையான கடன் வரலாற்றைக் கொண்டுள்ளது, அவர் எப்போது, எந்தக் கடனை எடுத்தார், அதை அவர் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினாரா இல்லையா என்பது பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.
சமீபத்தில், மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடரின் போது, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவுறுத்தல்களின்படி, வங்கிகளோ அல்லது பிற கடன் வழங்குநர்களோ குறைந்த அல்லது பூஜ்ஜிய CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே யாருடைய கடன் விண்ணப்பத்தையும் நிராகரிக்க முடியாது என்று கூறினார்.
CIBIL மதிப்பெண் இல்லையென்றால், வாடிக்கையாளரின் பின்னணி மற்றும் பணம் செலுத்தும் வரலாற்றைக் கருத்தில் கொண்டு கடன் வழங்க முடியும் என்று சவுத்ரி கூறினார். மேலும் கடன் தகவல் நிறுவனங்கள் தனிநபர்களிடம் கடன் அறிக்கைக்கு அதிகபட்சமாக ரூ. 100 வரை வசூலிக்க முடியும் என்றும் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். கடன் விஷயத்தில் அரசின் இந்த நடவடிக்கை மக்களிடைய வரவேற்பைப் பெற்றுள்ளது.