Saturday, December 20, 2025

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு: டீசர் எப்போது?

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இது இவரின் முதல்பட இயக்கமாகும்.

அவருடன் பரியா அப்துல்லா, ராஜூசுந்தரம், அன்புதாசன், சம்பத்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் அதன் உடன் படத்தின் டீசர் வருகிற 23ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் கையோடு இறுதி கட்டப்பணிகளையும் துவங்கி உள்ளனர்.

Related News

Latest News