Monday, December 1, 2025

RCB அணியை வாங்க முன்வந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம்!!

IPL தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் கழித்து நடப்பு தொடரில் கோப்பையை கைப்பற்றியது.

இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நடப்பு IPL சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக அதாவது, ரூ.17,762 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் RCB அணியை வாங்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் RCB அணியை வாங்க முன்வந்துள்ளது.

அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து RCB அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News