Monday, October 6, 2025

திரைப்பட விருதுகள்.. தலைவராக பிரகாஷ் ராஜ் நியமனம்!!

கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், விரைவில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவராக நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தலைவராக பிரகாஷ் ராஜ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News