ரூ.2.49 கோடி மதிப்புள்ள “ஃபெராரி” வாங்கிய முதல் நாளிலேயே நொறுங்கியது !

512
Advertisement

பொதுவாக எந்த பொருள் புதிதாக வாங்கினாலும் அதை முடிந்தவரை பத்திரமாக வைத்துக்கொள்வோம் .அதிலும் சிலர் அது ஆடம்பரமான பொருளோ அல்லது சாதாரண பொருளோ .. யாரிடமும் கொடுக்கமாட்டார்கள்.

உதாரணமாக நாம் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கினோம் என்றால் அதை எடுத்தவுடனே யாரிடமும் கொடுக்கமாட்டோம். அதிலும் சிலர் புதிய போனை வாங்கியதை கூட மற்றவர்களிடம் சொல்லமாட்டார்கள்.

இப்படி பாதுகாத்த அந்த போன்  உங்கள் கையிலிருந்து விழுந்து அதன் கண்ணாடி துண்டுகளாக நொறுங்கிவிட்டால் என்ன செய்வது? என்ன ? கற்பனை கூட  செய்ய முடியவில்லையா….!!

போனுக்கே இப்படின்னா.. இங்க ஒரு நபர் ,  ஃபெராரி  காரை வாங்கி இரண்டு கிமீ கூட தாண்டலா, அதுக்குள்ள மற்றொரு காருடன் மோதி முன் பகுதி நசுக்கப்பட்டது சம்பவம் நடந்துள்ளது.

https://twitter.com/DerbyshireRPU/status/1509878389900988427/photo/1

சமீபத்தில் லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் புத்தம் புது  ஃபெராரி  காரை வாங்கி உள்ளார். அதன் மதிப்பு ரூ. 2,49,16,055 ஆகும். ஆசையாக வாங்கிய காரை ஷோ ரூமில் இருந்து எடுத்து மூன்று கிலோமீட்டர் துயரம் ஒட்டிய நிலையில் மற்றொரு காருடன் மோதி உள்ளார் அந்த நபர்.

இதில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை , ஆனால் புத்தம் புதிய ஃபெராரியின் முன்பகுதி நசுக்கப்பட்டது.

காரின் முன்பகுதி நொறுங்கி, கீறல்கள் நிறைந்திருப்பதை உள்ளூர் போலீசார் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.