Monday, January 26, 2026

விஜய் முதல்வராக வேண்டி மொட்டையடித்துக்கொண்ட பெண் தொண்டர்

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தொண்டர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பொதுக்கூட்டத்தால் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற வேண்டும் எனவும் விஜய் அண்ணா முதல்-அமைச்சராக வேண்டும் எனவும் தவெக பெண் தொண்டர் ஒருவர் வேண்டிக்கொண்டு மொட்டையடித்துள்ளார்.

Related News

Latest News