நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது குடும்பத்துக்கு 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அழகு சாதன் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில், சடோமி என்ற இளம்பெண் கடந்த 2021ம் ண்டு வேலைக்கு சேர்ந்தார். அவர் முன் அனுமதியின்றி வாடிக்கையாளரை சந்தித்தால், நிறுவனத்தின் தலைவர் கோபமடைந்து அவரை நாய் என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சடோமி, தற்கொலைக்கு முயன்று கோமா நிலைக்கு சென்று, கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு, டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அப்பெண்ணின் குடும்பத்துக்கு 150 மில்லியன் யென்னை, இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில், 90 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
