Thursday, December 26, 2024

அல்வா புரோட்டா சாப்பிட ஆசையா?

https://www.instagram.com/reel/CXgAD0ygfvg/?utm_source=ig_web_copy_link

ராட்சத அல்வா புரோட்டா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோதுமையின் துணைப் பொருளான மைதா மாவிலிருந்து சமைக்கப்படும் புரோட்டா இந்தியா முழுவதும் பொதுவான உணவாக பல வருடங்களுக்கு முன்பே மாறிவிட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

முன்பு இரவு உணவாக மட்டுமே இருந்த புரோட்டா இப்போது காலை, மதியம் என எந்த வேளையிலும் விரும்பிச் சாப்பிடும் உணவாக உருவெடுத்துள்ளது.

அதனால் புரோட்டாவில் எத்தனை வகைகள் செய்யமுடியுமோ அத்தனை வகைகளையும் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவருகின்றன உணவகங்கள்.

விருதுநகரில் எண்ணெயில் பொரிக்கப்படும் புரோட்டா தமிழகம் முழுவதும் பிரபலம். அதேபோல், கொத்துப் புரோட்டா, வீச்சுப் புரோட்டா எனப் பலவகையான புரோட்டாக்களை உணவகங்கள் தயார்செய்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கின்றன.

அந்த வகையில், ராட்சத அல்வா புரோட்டா உணவு புரோட்டாப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரில் தற்போது ராட்சத அல்வா புரோட்டா மிகவும் பிரபலமாக உள்ளது. அங்குள்ள ஒரு தர்கா அருகே தெருவோரத்தில் இந்த ராட்சத அல்வா புரோட்டா ஒன்று 700 கிராம் மைதாவில் செய்யப்படுகிறது.

மாவுடன் 100 கிராம் டால்டா, சிறிதளவு உப்பு சேர்த்து சேர்க்கப்படுகிறது. பின்னர் அவற்றை சாமர்த்தியமாகப் பிசைந்து இரண்டரை அடி அளவுக்கு பெரிய புரோட்டாவாகச் செய்கிறார் சமையல் கலைஞர்.

பரோட்டா உடைந்துபோகாமலிருக்க ஆங்காங்கே விரல்களால் துளையிடுகிறார். பின்னர், அந்தப் புரோட்டாவை எண்ணெயில் பொரித்தெடுக்கிறார்.

பிரம்மிக்க வைக்கும் இந்த அல்வா புரோட்டாவை அப்படியே முழு அளவாக விற்காமல் 250 கிராம் என்கிற அளவுக்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார் இந்த உணவக உரிமையாளர்.

Latest news