இந்திய அரசாங்கம் சமீப காலமாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ. 1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 12-வது மாதமாக ரூ. 1.7 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.