மகளுக்காக தந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்ட போட்டோ ஒன்று மகள் மீதான தந்தையின் ஈடில்லா பாசத்தை வெளிப்படுத்துகிறது.
தந்தைக்கும் மகள்களுக்குமான பந்தபாசத்தை வார்த்தைகளால் அளவிடமுடியாது. தூய்மையான, இனிமையான தந்தை மகள் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த போட்டோ அமைந்துள்ளது.
சின்னஞ்சிறு குழந்தை ஒன்றுக்கு சமீபத்தில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்காக சிறுமியின் தலை மொட்டையடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மண்டையோட்டில் தையல் போடப்பட்டது..
அதைப் பார்த்த சிறுமியின் தந்தை, தனது மகள் கவலைப்படக்கூடாது என்பதற்காக, மகளைப்போலவே தானும் மொட்டையடித்துக் கொண்டார். மகளின் தலையில் உள்ளதுபோலவே தன் தலையிலும் தையல் தழும்பு ஏற்படுத்திக்கொண்டார்.
ஆன்லைனில் பகிரப்பட்டுள்ள அந்தப் படம் தற்போது காண்போரின் இதயங்களை வென்றுவருகிறது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயுள்ள தூய்மையான அன்பை சித்திரிக்கும் இந்தப் புகைப்படம் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.