Sunday, February 22, 2026

‘மாயாவி’ பட துணை நடிகையின் தந்தை கொடூர கொலை

சூர்யா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘மாயாவி’. இந்த படத்தில் நடிகை விஷ்ணு பிரியா நடித்திருந்தார். இந்நிலையில் அவரது தந்தை மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே உள்ள தனியார் பங்களாவில், வசித்து வந்துள்ளார். சுற்றுலா பயணிகள் போல அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், அவரது தந்தையின் முகம் மற்றும் உடல் பகுதியில் டேப் வைத்து கட்டியவாறு சேரில் அமர வைத்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

Related News

Latest News

error: Content is protected !!