Thursday, December 26, 2024

இன்னும் பயிற்சி வேணுமோ … !

குழந்தைகள் பெற்றோருடனான உறவு நெருக்கமாக இருப்பதோடு எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக உணரக்கூடிய வகையில் அந்த பிணைப்பு இருக்கவேண்டும்.

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாயின் பங்களிப்பு வலுவான , உணர்வுப்பூர்வமான மற்றும் உடல்ரீதியான இணைப்பு என்பது இன்றியமையாதது என்கிறது கோட்பாடுகள். என்னதான் இதுபோன்ற கோட்பாடுகள் இருந்ததனாலும்,

கிடைக்கவில்லை கடவுள் குடுத்த வரம் , கடவுலாகவே கிடைத்தார் வரமாக “அப்பா “ என்பதை உணர்த்தும் விதம் தந்தை மீது பிணைப்பு இருக்கும் குழந்தைகளுக்கு .

இது ஒரு புறம் இருக்க , குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் தாயை விட சிறந்தவர் இல்லை , தந்தையர்களை காட்டிலும். இணையத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் , ஓர் குழந்தை தூங்காமல் பயங்கரமாக அழுகிறது , தந்தையும் குழந்தையை கைகளில் அணைத்த படி அங்கும் இங்கும் நடைபோட்டு தன் குழந்தையின் அழுகையை நிறுத்துவிட வேண்டும் என தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் செய்கிறார். ஆனால் அந்த குழந்தை அழுகையை நிறுத்திய பாடு இல்லை.

குழந்தையின் அழுகுரலை கேட்டு , அங்கு வந்த தாய் , குழந்தையை படுக்கையில் இருந்து எடுத்து கைகளில் அணைக்க ,அழுகுரல் நின்றுவிடுகிறது . இதையெல்லாம் பார்த்த படி கையில் குழந்தையை வைத்திருக்கும் தந்தை முழித்த படி பார்க்கிறார். உடனே தன் கைகளில் வைத்திருக்கும் குழந்தை யார் என்று பார்த்த பிறகு தான் தெரிகிறது அது குழந்தையே அல்ல , குழந்தையின் பொம்மை என்று. இந்த காட்சி சிரிக்கும் விதம் இருந்தாலும், இது போன்று தான் இன்னும் பல தந்தைகள் உள்ளனர் .

குழந்தைகளை சமாளிப்பதில் , குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் உள்ளிட்ட தருணங்களில் தந்தையர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் ஏராளம் உண்டு.

Latest news