ஏப்ரல் 1 முதல் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்கிறது

கடந்தாண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தனிநபர் பயன்பாட்டிற்கான வாகனத்தை வைத்திருக்கும் பல லட்சம் பேர் இந்த ஆண்டு பாஸை வாங்கினர். இதற்கிடையே இந்த ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இது உயர்த்தப்படுவதாக NHAI எனப்படும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்போர் வசதிக்காக 2025 சுதந்திர தினத்தன்று ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 2026-27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணத்தை மறுசீரமைத்துள்ளது. மார்ச் 12ம் தேதி வெளியான உத்தரவுப்படி, இந்த பாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ₹3,000லிருந்து ₹3,075 ஆக உயருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர் பயன்பாட்டிற்கு கார்கள், ஜீப்கள், வேன் வைத்திருப்போருக்கு இது பொருந்தும்.

Related News

Latest News