விவசாயிகள் சிபில் ஸ்கோரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பயிர்க்கடன் வாங்கமுடியாமல் பாதிக்கப்படும் பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் என்றும் இ.பி.எஸ். குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட பரப்புரை பயணத்தை இ.பி.எஸ். தொடங்கஉள்ளார். இதையொட்டி, திருச்சி சென்றுள்ள அவர், விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
சிபில் ஸ்கோரால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து, பிரதமரிடம் மனு அளித்துள்ளதாகவும் இ.பி.எஸ்.குறிப்பிட்டார். வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது முடிந்து போன விஷயம் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன என்றும் தேர்தல் நெருங்கும்போதுதான், கூட்டணியில் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும் என்றும் இ.பி.எஸ். அந்த பேட்டியில் தெரிவித்தார்.