வியட்நாமிலுள்ள 990 ஹெக்டேர் விவசாய நிலங்களை அமெரிக்கா அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு சொந்தமான கோல்ஃப் கிளப் அமைப்பதற்காக கைப்பற்றப்படுவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இந்த கோல்ஃப் கிளப் திட்டத்தை வியட்நாமில் உள்ள Kinhbac City நிறுவனமே மேற்கொள்ளும்; இது டிரம்ப் குடும்பத்திடம் $5 மில்லியன் உரிமக் கட்டணம் செலுத்தி கொண்டுள்ளது. ராய்டர்ஸ் தகவலின் படி, இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
அரசாங்க அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் $12 முதல் $30 வரை இழப்பீடு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.