டிக்கெட் புக்கிங்கில் கட்டண சலுகை., ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!

ரயில்வே துறை, ரயில் ஒன் (Rail One) செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 3 சதவிகித கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுவரை ரயில்வே வாலட் மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பிற டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாக கட்டணம் செலுத்தினாலும் 3 சதவிகித தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக சமீபத்தில் ரயில்வே துறை ரயில் ஒன் என்ற ஒருங்கிணைந்த செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி மூலம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ஒரே இடத்தில் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும்.

ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 சதவிகித கட்டண தள்ளுபடி வரும் 14ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகை ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே பொருந்தும். இதைத் தவிர, பிற எந்த செயலி அல்லது இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படாது எனவும் ரயில்வே துறை தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

Latest News