மே 1ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை குவித்தது. தொடர்ந்து சேஸிங் செய்த ராஜஸ்தான் 117 ரன்களுக்கு சுருண்டது.
இந்த வெற்றியால் பாயிண்ட் டேபிளில் முதலிடத்தை மும்பை எட்டிப் பிடித்துள்ளது. அதோடு நல்ல நெட் ரன்ரேட் உடன், Play Off வாய்ப்பையும் பிரகாசமாக்கி கொண்டுள்ளது. இந்தநிலையில் போட்டியின் போது மும்பைக்கு சாதகமாக கள அம்பயர் நடந்து கொண்டதாக, ரசிகர்கள் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
போட்டியின் 2வது ஓவரை ராஜஸ்தானின் Farooqi வீச, 5வது பந்தில் ரோஹித் அவுட் ஆனார். அவுட் கொடுக்க அம்பயர் எந்தவித தயக்கமும் காட்டவில்லை. ஆனால் ரோஹித் Review செய்தார். இதையடுத்து அவர் அவுட் இல்லை என்று DRSல் தெரிய வந்தது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் 15 நொடிகளுக்குள் ரிவியூ எடுக்காமல், நேரம் முடிந்ததும் ரோஹித் ரிவியூ எடுக்க, அதை அம்பயரும் ஒப்புக் கொண்டது தான் சர்ச்சையாகி உள்ளது. IPL தொடரில் அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ்க்கு சாதகமாக நடந்து கொள்வதாக, நீண்டகால குற்றச்சாட்டு ஒன்று நிலுவையில் உள்ளது.
தற்போது ரோஹித் ரிவியூ செய்ததும், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை எல்லாம் ரசிகர்கள் தோண்டி எடுத்து அந்த அணியையும், ரோஹித்தையும் ஒருசேர கழுவி ஊற்றி வருகின்றனர். முன்னதாக போட்டி ஒன்றில் மும்பையின் விக்னேஷ் புதூர் கிரீஸை தாண்டி பந்து வீசும்போது, அம்பயர் அதற்கு நோ-பால் கொடுக்கவில்லை.
ஆனால் மற்ற அணிகளுக்கு மட்டும் அம்பயர்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, களத்தில் தீவிரமாக செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.