தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மேக்கரை கிராமத்தில் உள்ள விவசாய பகுதிக்கு சென்ற பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரிச்சியூர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில், உடம்பெங்கும் கிலோ கணக்கில் தங்க நகையை அணிந்தபடி, ஏங்க, வாங்க, குடிங்க, கும்மாளம் அடிங்க என தனது பக்கத்தை பாலோ- அப் செய்யும் பாலவர்களை வீணாக தூண்டும் விதத்தில் தனது வீடியோவில் இது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்துவதே தவறு என்ற நிலையில், அதனை வீடியோவாக பதிவு செய்து அனைவரையும் மது குடிக்க வாருங்கள் என முழக்கமிட்டு அழைப்பது மது பழக்கத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என பல்வேறு தரப்பினும் கமெண்ட்கள் மூலமாக வரிச்சியூர் செல்வத்தை காய்ச்சி எடுத்து வருகின்றனர். இதுதான் நீங்கள் திருந்தி வாழ்வது லட்சணமா என்று கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்