Tuesday, January 27, 2026

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தேவா. இவரது சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் தேவாவின் சகோதரர் சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார்.

Related News

Latest News