Wednesday, January 22, 2025

பிரபல காமெடி நடிகரின் கால் விரல் அகற்றம்! வறுமையால் நேர்ந்த விபரீதம்.

வடிவேலு, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி செய்து கலக்கியவர் பாவா லட்சுமணன்.மம்முட்டி

. முரளி மற்றும் அபாஸ் நடித்த ‘ஆனந்தம்’ படத்தில் தனியாகவே காமெடி செய்து அசத்தி இருப்பார் பாவா. அண்மையில், இவருக்கு சக்கரை நோய் வெகுவாக அதிகரித்தது. ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கட்டுக்கடங்காத சக்கரை நோயின் விளைவாக அவரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அவருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து பேசிய பாவா, ‘சுகர் மாத்திரை வாங்க காசு இல்ல. இந்த நேரத்தில் இப்படி செய்றாங்க’ என வேதனை தெரிவித்தார்.

உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு சந்தானம் உள்ளிட்ட பலரும் தன்னை தொடர்பு கொண்டு விசாரித்ததாக கூறிய பாவா, வடிவேலு தன்னிடம் பேசவில்லை என கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

Latest news