Saturday, December 27, 2025

15 கோடி ரூபாயை வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்

ஊதியம் பெறுவதற்கு மறுத்துள்ளார் இந்தியாவின்
பிரபல தொழிலதிபர் ஒருவர்.

எந்த நிறுவனமானாலும் கடைநிலை ஊழியர்முதல்
மேல்நிலை அதிகாரிவரை அவரவர் தகுதி, திறமைக்
கேற்ப ஊதியம் வழங்கப்படுவதுதானே உலக வழக்கம்.

நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி, நிர்வாக
இயக்குநராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி,
தலைமைச் செயலக அதிகாரியாக இருந்தாலும் சரி
அவர்களுக்குரிய ஊதியம் வழங்கப்பட்டுவிடும்.

இந்த வகையில் இந்தியாவின் முதன்மையான
நிறுவனத்தின் தலைவர் ஒருவர், தான் பெற்றுவந்து
கொண்டிருக்கும் ஊதியத்தை வேண்டாமென்று
சொல்லி இருக்கிறார். அவர் வேண்டாமென்ற சொன்ன
ஊதியத் தொகை எவ்வளவு தெரியுமா?

ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்.

கொரோனா பரவல் காரணமாகப் பொருளாதாரமும்
வணிகமும் பாதித்த நிலையில், இந்தத் தொழிலதிபரே
முன்வந்து தனக்கு சம்பளம் வேண்டாமென்ற மறுத்துள்ளார்.

அந்தத் தொழிலதிபர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தின் முகேஷ் அம்பானி.

Related News

Latest News