தன்னுடைய ஆட்டோவில் எழுதிய ஒரு வாசகத்தால்
ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்
ஆட்டோ டிரைவர் ஒருவர்.
கேரளா மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் பிரதீப்.
ஆட்டோ டிரைவரான இவர் தன் ஆட்டோவில்
பவ்லோ கொயல்லா என்னும் பெயரை ஆங்கிலம் மற்றும்
மலையாள மொழிகளில் எழுதி வைத்துள்ளார்.
இந்தப் பெயர் அவரை உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்துவிட்டது-
இந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் பிரேசில் நாட்டின்
பிரபல நாவலாசிரியர். இவர் தி லெவன் மினிட்ஸ், வெரோனிகா
டிசைட்ஸ் டு டை, தி பில்கிரிமேஜ், அடல்டரி உள்ளிட்ட
பிரபல நாவல்களை எழுதியுள்ளார்.
இந்த நாவலாசிரியரின் பெயரான பவ்லோ கொயலோ பெயரை
ஆட்டோ டிரைவரான பிரதீப் தன் ஆட்டோவில் எழுதி வைத்தார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது-
சமூக வலைத்தளத்தில் இதனைப் பார்த்த பவ்லோ கொயல்லோ
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அத்துடன் தனது ட்டுவிட்டர்
பக்கத்திலும் அப்போட்டோவைப் பதிவிட்டார். அவ்வளவுதான்
டிரைவர் பிரதீப்புக்குப் பாராட்டுகள் குவியத் தொடங்கின.
காரணம் நாவலாசிரியர் பவ்லோவின் ட்டுவிட்டர் வலைத்தளக்
கணக்கை ஒன்றரை கோடிபேர் பின்பற்றி வருகின்றனர்.
இதுபற்றிக் கூறியுள்ள டிரைவர் பிரதீப் பவ்லோவின்
நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவையனைத்தையும் வாசித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.