1503ஆம் ஆண்டு France நாட்டில் பிறந்த நாஸ்டராடாமஸ் எதிர்காலத்தை பற்றி பதிவு செய்த கணிப்புகள் காலங்காலமாக கவனம் ஈர்த்து வருகிறது.
புதிரான மொழியில் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை கணித்துள்ள நாஸ்டராடாமஸின் துல்லிய விகிதம் 70 சதவீதம். ஹிட்லரின் சர்வாதிகார ஒடுக்குமுறை, இந்திராகாந்தி படுகொலை, கோவிட் பெருந்தொற்று, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் என காலச்சக்கரத்தின் திருப்புமுனை நிகழ்வுகளை கணித்து வைத்தவர் நாஸ்டராடாமஸ்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் நிறைவேற உள்ளதாக இவர் கணித்துள்ள சம்பவங்கள் திகிலூட்டுபவையாக அமைந்துள்ளது. உக்ரைன் போர் தீவிரமடைந்து, சீனா தைவான் போன்ற நாடுகளிடையே கடும் போர் நிலவும் சூழல் ஏற்படும் எனவும் அப்போது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்துவதால் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்றும் நாஸ்டராடாமஸ் கணித்துள்ளார்.
போரின் எதிரொலியாக பஞ்சம் ஏற்பட்டு உணவு கிடைக்காத நிலை மோசமடைந்து மனிதன் மனிதனையே உண்ணும் பயங்கரமான அவல நிலை ஏற்படும் எண்ணற்ற அதிர்ச்சியூட்டும் கணிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் புதிய போப் பதவியேற்பார் என கணித்துள்ள நாஸ்டராடாமஸ் முன்னெப்போதும் இல்லாதவாறு கடல் அளவுகள் உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2029ஆம் ஆண்டிற்குள்ளாக மனிதர்களால் செவ்வாய் கிரகத்தில் குடியேற முடியும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், 2023ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் தொய்வு ஏற்படும் என நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.