பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி, கொச்சியில் நடைபெற்ற பா.ஜனதா நிகழ்ச்சியில், கேரள மாநில பா.ஜனதா துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.
இதுகுறித்து நடிகை ஊர்மிளா உன்னி கூறும்போது, எனது அரசியல் பயணத்தை பா.ஜனதாவில் இருந்து தொடங்குகிறேன். சமூக, கலாசார துறையில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த நான் மோடியின் ஆதரவாளர். பா.ஜனதா உடன் எனக்கு ஒரு பிணைப்பு உள்ளது. பா.ஜனதாவில் இணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட போகிறேன் என்றார்.
