மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு தம்பதியினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டு அவர்களின் காரை நிறுத்திய அவர்கள், தாங்கள் கேட்பதை தரவில்லை என்றால், உங்களை மந்திரம் சொல்லி எரித்து சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் முழுவதையும் அந்த தம்பதியினர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்பையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர சோதனை நடத்தினர்.
இதையடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட 7 போலி சாதுக்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலைவாய்ப்பு இல்லாததால் இவ்வாறு வழிப்பறி செய்ய முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
