10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்… மறுதேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

2025-26 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 94.31 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டும் மாணவிகள் அதிக தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதமாகவும் உள்ளது.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மறுதேர்வு ஜூலை 8 முதல் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 22-ந்தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related News

Latest News