Sunday, December 22, 2024

முகக் கவச ஏடிஎம்

ஏடிஎம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு வசதியாப் போச்சு-…
பேங்க்ல போய் மணிக்கணக்கா கால்கடுக்க கியூவுல நிக்க
வேண்டியதில்ல.

தண்ணீர் பிடிக்க குழாயில வரிசயா குடங்கள வச்சு ரயிலு
மாதிரி வளஞ்சு வளஞ்சு போய் சண்ட போட வேண்டிய அவசியமில்ல.

நகக் கடைக்குப் போயி கூட்டத்தோடு கூட்டமா நின்னு
மணிக்கணக்கா குழம்பி கடைசியில அரை மனசோட நக
வாங்க வேண்டிய அவசியமும்,
நாப்கின் வாங்க கூச்சப்பட்டு தயங்கித் தயங்கி மெடிக்கல்
ஷாப்ல நிக்க வேண்டிய அவசியமும் இல்ல…

இப்டி ஏகப்பட்ட இல்ல…

இந்த வரிசயில இப்ப முகக் கசவமும் ஏடிஎம்ல வந்துடுச்சி.

கொரோனா வேகமா பரவுன்ன உடனே பல கடைகள்ல
முகக் கவசத்த அவங்கவங்க இஷ்டப்படி விலயக் கூட்டி
வித்தாங்க…பல நேரங்கள்ல மொகக் கவசத்துக்கு தட்டுப்பாடும்
ஏற்பட்டுச்சு.

சில கடையில கொஞ்சம் வெரைட்டிதான் வச்சிருந்தாங்க…
அவங்க சொன்னதுதான் ரேட்..

இப்ப இந்த எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு வந்துடுச்சி..

முகக் கவச ஏடிஎம்

அஞ்சு ரூவா நாணயத்த இந்த ஏடிஎம் மிஷின்ல போட்டா
தரமான ஒரு முகக் கவசம் வரும்.

இந்த மெஷின்ல 500லருந்து ரெண்டாயிரம் வரைக்கும்
முகக் கவசம் வைக்கலாம்னு இந்த மெஷின உருவாக்குன
கிருஷ்ணப் பிரியதர்ஷினி சொல்றாங்க…

நாணயத்துக்குப் பதிலா ரூவா தாள் போட்டாலும் முகக்
கவசம் வருமாம்.

இலவசமா முகக் கவசம் கிடைக்கிற மாதிரியும் இந்த
ஏடிஎம்மெஷின பிரிய தர்ஷினி வடிவமைச்சிருக்காங்க…

எந்தப் பந்தப் போட்டாலும் திருப்பியடிக்கிற கிரிக்கெட்
ஜாம்பவான் மாதிரி, எந்த நோய் வந்தாலும் அதைத் தடுக்கவும்
குணப்படுத்தவும் மருந்தும் தடுப்பு வழிகளும் கண்டுபிடிக்கிறாங்க…

அத சரியாப் பயன்படுத்தினா பலன் பொதுமக்களுக்குதான்.
முகக் கவசம் நம் உயிர் காக்கும் அரிய கவசம்.

Latest news