சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொந்தனா பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதிகாலை 1.30 மணியளவில் பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
