Recent ஆ வந்த Love Today படத்துல, ஹீரோவுக்கு அம்மாவா நடிச்சுருந்த ராதிகா படம் முழுக்க எல்லா பிரச்சினைக்கும் Phone தான் காரணம்னு சொல்லிட்டே இருப்பாங்க.
அத பாத்த எல்லா அம்மாக்களும், ஆமா ஆமான்னு தலையே வலிக்குற அளவுக்கு தலையாட்டிட்டு இருக்காங்கன்னா பாத்துக்கோங்க.
ரொம்ப நேரம் phone யூஸ் பண்ணா கண்ணு பிரச்சினை வரும், தூக்கம் சரியா வராதுன்னு ஏற்கனவே இருக்க பாதிப்புகளோடு சேத்து முகத்துக்கும் முடிக்கும் ஏகப்பட்ட பிரச்சினை வருமாம்.
ஆரோக்கியமான சருமத்துக்கு காரணமான கொலாஜென், blue screen லைட்னால சிதைஞ்சு, முகத்தில சுருக்கம் ஏற்பட்டு தளர்ந்து போகுற தோலால சீக்கிரமே வயசான தோற்றம் வந்துடுமாம்.
தோலோட நிறம் கருப்பா மாறவும் வாய்ப்பு இருக்கற்தா சில அறிக்கைகள் சொல்லுது. வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், அதிகமா screen time exposure இருக்குற நபர்களுக்கு skin allergy மற்றும் rashes வருதுன்னு ஆய்வுகளில் தெரிய வந்திருக்கு.
தலைமுடிக்கும் blue lightக்கும் நேரடியான தொடர்பு இல்லனாலும், வெளிச்சம் இருட்டுன்னு உடம்புக்கு தேவையான circadian rythm பாதிக்கப்படும் போது உள்ளிருந்து ஏற்படக்கூடிய மன அழுத்தத்தினால் முடி கொட்டும்னு சொல்லப்படுது.
செல்களை இறக்க செய்ற Reactive Oxygen Species மற்றும் சூரியன் கிட்ட இருந்து வர கதிர்வீச்சுக்கு நெருக்கமான High energy visibility lightஉம் தான் இது மாதிரியான விளைவுகளுக்கு காரணம்னு சொல்ற மருத்துவர்கள், டிஜிட்டல் மின் சாதனங்களின் பயன்பாட்டை குறைச்சுக்கிட்டு, நேரத்துக்கு தூங்குறது தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையா இருக்கும்னு அறிவுறுத்திட்டு வராங்க.