Friday, August 22, 2025
HTML tutorial

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது

ரணில் விக்ரமசிங்கே 2022 முதல் 2024 வரை இலங்கை அதிபராக இருந்தபோது தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு பணத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக இலங்கை சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிஐடி போலீஸ் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்கே இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப்பின் ரணில் விக்ரமசிங்கே கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News