எல்லாமே இலவசம்

237
Advertisement

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது வியாபாரத்தில் மட்டுமல்ல,
வாழ்க்கையிலும் சிலசமயங்களில் உள்ளது-

அவை என்னென்ன தெரியுமா…?

கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்

பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்

வெறுப்பை வாங்கினால் பகை இலவசம்

கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம்

மாறாக….

நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம்

உடற்பயிற்சியை வாங்கினால் ஆரோக்கியம் இலவசம்

அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம்

நேர்மையை வாங்கினால் நித்திரை இலவசம்

அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம்

எது வேண்டுமென இப்போதே முடிவுசெய்யுங்கள்