நம் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி உடலை இயல்பாக இயங்க வைப்பதில் கல்லீரல் இன்றியமையா பங்கு வகிக்கிறது. சீரான செரிமானம், கொழுப்புச்சத்துக்களை முறையாக சேமிப்பது மற்றும் மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக அமையும் கல்லீரல் நாம் யோசிக்காமல் செய்யும் சில நடைமுறைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அதிகமான சக்கரை அளவை உடைத்து எடுக்க திணறும் கல்லீரல் நாளடைவில் பெலவீனமடைகிறது.
மது அருந்தும் பழக்கத்தினால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் உண்டாகிறது. மஞ்சள் காமாலை, இரத்த வாந்தி என துவங்கும் பிரச்சினைகள் பெரும்பாலும் கல்லீரல் புற்றுநோயில் சென்று முடிகிறது.
மேலும், மைதாவினால் செய்த உணவு பொருட்கள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை தவிர்ப்பதால் கல்லீரலுக்கு கொடுக்கும் வேலைப்பளு குறைந்து நீண்ட நாட்களுக்கு நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.