சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பூலித்தேவனின் திரு உருவப்படத்திற்கு செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.கே மூப்பனார் ஒரு காலமும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தது கிடையாது எனவும், சமீபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினரை,மூப்பனாரின் ஆன்மா கூட மன்னிக்காது எனவும் விமர்சித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, பாமக, தேமுதிக மற்றும் ஓபிஎஸ் வெளியேறி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.