ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் EPS தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள் என்று கூறினார்.
அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுகதான் என்றும் கூறினார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
