கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான ஈவேரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.