அதிமுகவும், பாஜகவும் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறிவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். பின்னர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். அன்றைய தினம், மதுரையில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.