தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.
கரூர் சிபிஐ விசாரணை, ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் இழுபறி போன்றவை அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்காக விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “அதிமுக கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி வரவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது.
மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், நம்பிக்கையுடன் இருங்கள் என கூறியுள்ளார். அந்த புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகமா இருக்குமோ என பலரும் யூகித்து வருகின்றனர்.
