ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதாவது EPFO ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவதற்கான எளிய வழிகாட்டியை EPFO வெளியிட்டுள்ளது.
முதலில், ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று, UAN, கடவுச்சொல் மற்றும் CAPTCHA உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு, திரையின் மேற்புறம் உள்ள View பகுதியில் உள்ள Service History option-னுக்கு செல்லவும். அங்கு பட்டியலில் இருந்து நீக்க விரும்பும் தவறான உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து Delink button-ஐ கிளிக் செய்து, காரணத்தை உள்ளிட வேண்டும்.
பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி செயல்முறையை உறுதிப்படுத்தவும். வெற்றிகரமாக முடிந்தால், திரையில் உறுதி செய்யப்பட்ட செய்தி தோன்றும், மேலும் அந்த ஐடியின் சேவை History போர்ட்டலில் காணப்படாது.
குறிப்பாக, வேலை செய்யும் நிறுவனம் தவறாக அந்த ஐடியைப் பயன்படுத்தி ECR தாக்கல் செய்திருந்தால், நீக்கும் செயல்முறை முடியாது; பதிலாக ‘பிழை’ செய்தி தோன்றும்.
மேலும், EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்துமாறு பரிசீலனை செய்கிறது. மத்திய EPFO வாரியம், டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத்தில் இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
தொழிலாளர் அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்த உயர்வு 10 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்களை கட்டாயமாக்கும். மெட்ரோ நகரங்களில் பல ஊழியர்கள் ரூ.15,000-க்கு மேல் அடிப்படைச் சம்பளம் பெறுவதால், அவர்கள் இ.பி.எஃப்.ஓ-வில் இணைவது தற்போது விருப்பத்தேர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
