Monday, April 7, 2025

Game Changer! இனி ‘உங்க PF’ பணத்தை UPI ஆப்லயே ‘ஈஸியா’ எடுத்துக்கலாம்!

தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு சீர்திருத்தங்களை கடந்த சில மாதங்களாக, EPHO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துதல், PF உரிமைகோரலை நெறிப்படுத்துதல் மற்றும், IT அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, EPHO செயல்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் அண்மையில் PF 3.0 என்ற திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்தது. இதன்மூலம் ஊழியர்கள் ATMல் இருந்தே தங்களின் PF பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக உறுப்பினர்களுக்கு ஒரு தனி கார்டை வழங்கிட, தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கார்டு மூலம் அருகாமையில் உள்ள ATMகளில் இருந்து பயனர்கள், PF பணத்தை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம். 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று, தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தநிலையில் அதற்கு முன்பாகவே, UPI மூலம் உறுப்பினர்கள் PF பணத்தை, எடுத்துக் கொள்ளும் திட்டத்தை EPHO அறிமுகம் செய்யவிருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், உறுப்பினர்கள் டிஜிட்டல் வாலெட் மூலம் தங்கள் உரிமை கோரல் தொகையை எளிதாகப் பெற முடியும்.

இதற்காக வணிக வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, தொழிலாளர் அமைச்சகம் டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், உறுப்பினர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின் மொபைல் போன் வழியாக, பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

உறுப்பினர்கள் தங்களின் PF பணத்தை எடுப்பது, தற்போது வரை சுலபமான விஷயமாக இல்லை. வங்கி நடைமுறைகள், RTGS மற்றும் NEFT செயல்முறைகள் காரணமாக, பணத்தை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த தாமதத்தை தவிர்க்கும் பொருட்டே UPI முறையில், பணம் எடுக்கும் வசதியை தொழிலாளர் அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்த 3 மாதத்துக்குள், அதாவது May மாத இறுதிக்குள் இந்த வசதியை, நடைமுறைக்கு கொண்டுவர முடிவுசெய்துள்ள EPFO, இதற்கான Blueprint பிளானைக்கூட தயாரித்து விட்டதாம்.
அடுத்தகட்டமாக UPI தளங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த, NPCI எனப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடனும், EPFO பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து இருக்கிறது.

UPI மூலம் பணம் எடுக்கும் வசதி வந்துவிட்டால், ஊழியர்கள் மிகக்குறைந்த நேரத்தில் தங்களின் பணத்தை எடுக்க முடியும். இதற்காக ஊழியர்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. எனவே ஊழியர்கள் மத்தியில் இந்த வசதி மிகப்பெரும் வரவேற்பைப் பெறும் என தெரிகிறது.

இந்த 2024-2025 நிதியாண்டில் மட்டும், 50 மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைளை, EPFO தீர்த்து வைத்துள்ளது. இதற்காக சுமார் 2.05 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், EPFO வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news