Tuesday, April 22, 2025

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த இரண்டு நிறுவனங்களிலும் உள்ள நிலத்தை ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில், இந்நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு உள்ளார் என்பதால், அவரை 27-ம் தேதி விசாரணைக்காக ஹைதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்படும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Latest news